தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்

* 58,700 பொலிஸ்
*19,500 முப்படைகள் + அதிரடிப்படை
* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு
* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.
வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.
நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.
நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

லெனின் கருப்பனை விசாரிக்க சென்னை வருகிறது கர்நாடக போலீஸ் குழு

நித்தியானந்தாவின் அந்தரங்க அலங்கோலத்தை படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ள லெனின் கருப்பனை விசாரிக்க கர்நாடக போலீஸ் குழு சென்னை வரவுள்ளது.நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் நித்தியானந்தா இருந்த காட்சிகள் வீடியோ படமாக வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர்.இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை படம் பிடித்தவரான லெனின் கருப்பன், சர்ச்சை வெடித்த சில நாட்களில் சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து மேலும் ஒரு சிடியைக் கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.தற்போது நித்தியானந்தா தொடர்பான வழக்குகளை கர்நாடக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த மாநில சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா, மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.சில நாட்களுக்கு முன்பு சேலம் ஆத்தூரில் உள்ள லெனின் குடும்பத்தாரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். லெனினின் அண்ணன் குணசேகரன், அண்ணி ராணி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கடைசியாக லெனின் ஆத்தூருக்கு எப்போது வந்தார்? நித்யானந்தா விவகாரத்துக்கு பின்னர் உங்களை தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்டனர். இதற்கு பதில் அளித்த லெனின் உறவினர்கள் 19 வயதில் இந்த ஊரை விட்டு சென்ற லெனின் 2 முறைதான் இங்கு வந்துள்ளார். எங்களுடன் லெனின் தற்போது தொடர்பில் இல்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் 3 நாட்கள் வரை அங்கு முகாமிட்டு லெனின் பற்றிய தகவல்களை பெங்களூர் போலீசார் திரட்டினர். நித்யானந்தா விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நாளில் இருந்து சீடர் லெனின் சென்னையில் தங்கியுள்ளார். இங்கு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவுடன் தொடர்ந்து சென்னையில் இருக்கும் சீடர் லெனினிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் அவர்கள் சென்னை வருகிறார்கள். இங்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுடன் கலந்து ஆலோசிக்கும் பெங்களூர் போலீசார் லெனின் தொடர்பாவும் சாமியார் தொடர்பாகவும், மேலும் பல தகவல்களை திரட்டுகிறார்கள். இந்த நிலையில் நித்தியானந்தா குறித்து தகவல் தெரிந்தோர் அதுகுறித்து 080-22381894, 9480800123 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா கூறியுள்ளார். மேலும், சி.ஐ.டி. போலீஸ், கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூர் என்ற முகவரிக்கும் நேரில் வந்து தெரிவிக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள்.

“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”

விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்...

வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.

டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.

சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.

உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள்.

கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும் துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.

இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..

கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது.

பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.

உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் - மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.


பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.

மேற்கண்ட சம்பவத்தை நான் ஒரு யோகியிடம் இருந்து கேட்டு கதைவடிவில் தந்திருக்கிறேன். தகவல் உண்மையா என காண இங்கே இருக்கு சுட்டி இங்கே. சுட்டியில் உள்ள சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை தன்மையில் விவரிக்கபட்டுள்ளது..

என்ன செய்ய...? சாட்சி கொடுத்தால் தானே நம் மக்கள் இங்கே அனைத்தையும் நம்புகிறார்கள்.

இது போல எத்தனையோ சம்பவங்கள், நீதி மன்றத்தில் இது போன்ற விசித்திர வழக்குகள்.[திரு. ஷண்முகப்ரியன் கூறியது போல விமலானந்தா எனும் அகோரியின் வாழ்க்கை சம்பவம் கூட நீதிமன்றவழக்கு தான்]

இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!

உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம் கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும் வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன் கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.


நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.
[ காலேஜ் அட்மீஷன் காட்சியை பார்த்தவுடன் கால்ககளை சேர்த்து உற்கார தோன்றுகிறதா?]


காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது... காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]

சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.

ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.

யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.


கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்பு


கடந்த சில பதிவுகளாக யோகிகளை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

அமானுஷ தன்மையை கூறியும், யோகிகள் உயர்ந்தவர்கள் என கூறியும் இவர்களை பின்பற்ற சொல்லுவதற்காக நான் இந்த பதிவு இடவில்லை. இவர்களை பின்பற்ற சொல்லுவது கூட இவர்களுக்கு பிடிக்காது என்பதே உண்மை. இவர்களை வணங்க தேவையில்லை குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்.

சத்யமேவ ஜெயதே..!

பாக். கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணக்கிறார் சானியா


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மணக்கவுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. தனது குடும்ப நண்பரின் பிள்ளையான ஹைதராபாத்தைச் சேர்ந்த சோரப் மிர்ஸாவைத்தான் சானியா மணப்பதாக இருந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக சானியாவின் தந்தை அறிவித்தார். இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அதற்குக் காரணம் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை சோயப் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ள தகவலில், உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. நான் சானியாவை மணக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைதான். கடவுள் அருளால், ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம்.

சானியா ஒரு சர்வதேச விளையாட்டு வீராங்கனை. எனவே அதன் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். அவர் தனது துறையில் சிறந்து விளங்க நான் உறுதுணையாக இருப்பேன்.

2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அவர் இந்தியா சார்பாக விளையாட வேண்டியது அவசியமாகும், முக்கியமானதாகும். அவர் இந்தியாவுக்காக பதக்கம் வென்றால், ஒரு கணவராக நான் மிகவும் பெருமைப்படுவேன் என்று கூறியுள்ளார் சோயப் மாலிக்.
Read: In English
திருமணத்திற்குப் பின்னர் சானியாவும், சோயப் மாலிக்கும் துபாயில் வசிக்கவுள்ளதாக சானியாவின் தந்தை இம்ரான் மிர்ஸா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். சோயப் துபாயில்தான் தற்போது வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சுல்தானில் மூன்று ரஜினி!

வருமா வராதா என்று ரஜினி ரசிகர்களே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

எந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, இப்போது மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

சுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.

இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.

இந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம் பெறுவதாக சௌந்தர்யா தெரவித்துள்ளார்.

"இந்த மூன்றாவது ரஜினி கேரக்டர் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும். முக்கியமான இன்னொரு விஷயம்... சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை..." என்கிறார் சௌந்தர்யா.

இதற்கிடையே, சுல்தான் விவகாரத்தில் கோர்ட்டுக்குப் போவதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, கோர்ட்டுக்கு வெளியே விவகாரத்தை லதா ரஜினி முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுல்தான் படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோ தலைவர் லதா ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் வீட்டில் முதல்வர்.


கிழக்கிலங்கையின் முதல்வரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அண்மையில் மக்கள் குறை கேட்டு சென்ற சமையம் தனது மதிய உணவினை ஓர் ஏழையின் குடிசையில் அமர்ந்து அமைதியாக அருந்துவதே இக்காட்சி. ஓர் தாயின் அன்புக் கரங்களால் தனது பசியை தீர்ப்பதை இப்படங்களில் நாம் பார்க்கலாம்.