மட்டக்களப்பு பொது பேருந்து நிலையம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் நிமித்தம் மஹிந்த சிந்தனையின் நெக்டப் வேலைத்திட்டத்தின் கீழ் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும், 01।05।2010 அன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.விருத்தி
மட்டக்களப்பு பொது பேருந்து நிலையம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் நிமித்தம் மஹிந்த சிந்தனையின் நெக்டப் வேலைத்திட்டத்தின் கீழ் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும், 01।05।2010 அன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.விருத்தி
இங்கிலாந்து நாட்டு கோடீசுவரர்களில் இந்த ஆண்டும் முதல் இடத்தை இந்தியரான லட்சுமி மிட்டல் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 6-வது ஆண்டாக அவர் தொடர்ந்து இங்கிலாந்து கோடீசுவரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டு சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதோடு இங்கிலாந்தில் ஆயிரம் கோடீசுவரர்கள் இருப்பதாகவும், அது பட்டியலிட்டு உள்ளது.லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் பிறந்த சுரங்கத் தொழில் அதிபர் அனில் அகர்வால் 60 இடங்கள் முன்னேறி 10-வது இடத்துக்கு வந்து இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 3 ஆயிரம் கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கிலாந்து நாட்டு பணக்காரர்களில் 245-வது இடத்தில் இருக்கிறார். அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 100 கோடி ரூபாய் உயர்ந்து உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 1450 கோடி ரூபாய் ஆகும். விருத்தி
பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி மீராமக்காம் பள்ளி, கிருஸ்தவ தேவாலயம் தலதா மாளிகை,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்கும் சென்று நல்லாசி பெற்றார். கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை நடந்துடன் அவர் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மீராமக்கம் பள்ளியிலும் துவா பிராத்தனை இடம் பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அங்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.பிரதமருடன் அவரது துனைவியார் மகன்,மகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களான அமைச்சர் பர்டி பிரேமலால் திசாநாயக்க,அமைச்சர் துமிந்த திசாநாயக்க மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்விருத்தி
நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறிவிட்டது. அங்கு இருந்த ஆண், பெண் சீடர்கள் காவி உடைக்கு பதிலாக சுடிதாரிலும், பேன்ட்-டி சார்ட்டிலும் வலம் வருகிறார்கள்.பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவிடம் சீடர்களாக உள்ளனர். நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகும், அவரது சீடர்கள் பலர் ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.நித்யானந்தா கைது செய்யப்படுவதற்கு முன்பு பிடதி ஆசிரமத்தில் தினமும் தியான வகுப்புகள், யோகா வகுப்புகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும். மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், வி.ஐ.பி.க்கள் என்று பலர் வந்து நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சென்றார்கள்.ஆனால் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கு யாரும் வருவதில்லை. முன்பு ஆசிரமத்தில் தங்கி இருந்த நித்யானந்தாவின் சீடர்கள் காவி உடைந்து வலம் வரும்போது, அது ஒரு மடம் போல் காட்சி அளித்தது. தற்போது பிடதி ஆசிரமம் களை இழந்து காணப்படுகிறது.அப்போது ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடைந்து அணிந்தும், பெண் சீடர்கள் வெள்ளை சேலை அணிந்து இருப்பதும்தான் வழக்கம். ஆனால் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது.தற்போது ஆசிரமத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடையை கழற்றி வீசி விட்டு கல்லூரி மாணவர்கள் போல் பேன்ட்-டீசர்ட் அணிந்து வலம் வருகிறார்கள். இதேபோல் பெண் சீடர்கள் வெள்ளை சேலைகளுக்கு பதிலாக வண்ண, வண்ண சுடிதார்களில் கல்லூரி மாணவிகள் போல் ஆசிரமத்தை சுற்றி வருகின்றனர். நித்யானந்தாவின் கைதுக்கு பிறகும், அவரை பற்றி தொடர்ந்து வரும் செக்ஸ் புகார்களை தொடர்ந்து சீடர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.விருத்தி
பல்கேரியாவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்கேரிய வீரர் வெசலின் டோபலோவை இரண்டாவது ஆட்டத்தில் வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.12 ஆட்டங்கள் கொண்ட இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போது இருவரும் 1- 1 என்று சமநில வகிக்கின்றனர்.
ஆனந்த் இதில் ராணி, சிப்பாயுடன் நகர்த்தலைத் துவங்கினார். இது சிக்கலான ஒரு துவக்க என்பதால் இரு வீரர்களின் நகர்த்தலும் எந்த ஒரு கூடுதல் நன்மைக்கும் இட்டுச் செல்லவில்லை.
முதலில் சிப்பாய் ஒன்றை வெட்டுக் கொடுத்தார் ஆனந்த். ஆட்டம் அப்போது டோபலோவ் சார்பாக இருந்தது. ஆனால் 15-வது நகர்த்தலில் திடீர் திருப்பமாக இருவரும் தங்களது ராணிகளை பரஸ்பரம் வெட்டிக் கோண்டனர்.
இதன் பிறகு ஆனந்த் சில எதிர்பாராத நகர்த்தல்களைச் செட்ய்தார். ஆனால் ஆட்டத்தின் 25-வது நகர்த்தலில் ஆனந்தின் பிஷப்பை தன் குதிரையை கொண்டு காலி செய்ய டோபலோவ் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைய ஆனந்தின் ஆட்டத்தில் வேகம் பிறந்தது.
அதன் பிற்கு ஆனந்தின் கட்டுப்பாடு ஆட்டத்தில் அதிகரிக்க டோபலோவ் வெறுப்படைந்தோ அல்லது தன் ஆக்ரோஷத்தைக் காண்பிக்கவோ 29-வது நகர்த்தலில் எப்படியாவது ஆனந்தின் யானையை காலி செய்ய முயன்றார். ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது.
கடைசியில் ராணி இல்லாத நிலையில் யானைகள்,குதிரை, பிஷப் ஆகியவற்றை கன கச்சிதமாக நகர்த்தி டோபலோவ் பகுதிக்குள் புகுந்து கடும் நெருக்கடி கொடுக்க, டோபலோவ் தனது காய்களை நகர்த்த முடியாமல் கட்டிப் போடப்பட்டார்.
கடைசியில் 38-வது நகர்த்தலில் டோபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
விருத்தி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவவிட்டுள்ளது. இதற்கு காரணமான லலித் மோடியை ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனைய தொடர்ந்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில், லலித்மோடி கலந்து கொள்வதை தடுப்பதற்காக, இறுதி போட்டி முடிந்ததும், நேற்று நள்ளிரவு அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். நிர்வாகம் நடத்தி வரும் 20/20 கிரிக்கெட் போட்டியில் பல ஆயிரம் கோடி பணம் புரள்கிறது. கொச்சி அணி ஏலம் விடப்பட்ட விவகாரத்தில் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கும், வெளியுறவு இணையமைச்சர் சசி தரூக்கும் இடையே நடந்த மோதலில் தரூரின் பதவி பறிபோனது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது மத்திய அரசின் கவனம் திரும்பி உள்ளது. மக்களவையில் நேற்று இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பின.ஐ.பி.எல் கொச்சி அணி ஏலத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் தலையிட்டதாகவும், அவரது தோழி சுனந்தா புஷ்கருக்கு ரூ.70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக பெற்றுத்தந்தார் எனவும் டுவிட்டர் இணையளத்தில் தகவல் வெளியிட்டார் லலித் மோடி. இந்த விவகாரம் பார்லிமென்ட்டில் பூதகரமாக வெடித்தது. இதனால், லலித்மோடியை பதவி விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியது. இதையடுத்து வேறு வழியில்லாமல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சசிதரூர். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நிலவுகிறது, கருப்பு பணம் விளையாடுகிறது என புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சகம் கூறியது. முதலில் லலித்மோடியின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியது. பின் நாடு முழுவதும் 8 முக்கிய நகரங்களில் உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர். லலித் மோடிக்கு 3 அணியில் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்ச்சையை ஆரம்பித்த லலித்மோடியே சர்ச்சையில் சிக்கியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், விளக்கம் அளிக்க 5 நாள் அவகாசம் வேண்டும் என கேட்டார் லலித் மோடி. 'ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் நான்தான். எனக்கு தெரியாமல் கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதம் என்றும், முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கிப் பாருங்கள்' என்றும் கூறினார். இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் லலித்மோடி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென, இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பேன் என லலித்மோடி நேற்று மாலை அறிவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில், 'ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டம் என் தலைமையில் நடக்கிறது. அப்போது, புகார்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.இது குறித்து கிரிக்கெட் வாரிய தலைவர்கள் சஷாங் மனோகர், நிர்வாகிகள் சீனிவாசன், ரத்னாகர் ஷெட்டி, நிரஞ்சன் ஷா ஆகியோர் நேற்று மாலை ரகசிய ஆலோசனை நடத்தினர். ஐ.பி.எல் சீசன்&3 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி மும்பையில் நேற்று இரவு நடந்தது. போட்டி முடிந்ததும், லலித் மோடிக்கு, பி.சி.சி.ஐ. சஸ்பெண்ட் நோட்டிஸ் அனுப்பியது. இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் லலித்மோடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி உத்தரவு நேற்று நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)

