பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலி.

பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வாகன சோதனைச் சாவடியில், போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து, மோதி வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர சம்பவத்தில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தை பாதுகாப்புப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் -பிரபா கணேசன்.

ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபா கணேசன் , தேசியப் பட்டியல் பாராளுன்ற உறுப்பினர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சியை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளதுடன் , இதன் பிரகாரம் அம்முன்னணியிலிருந்து வெளியேறி தான் பாராளுமன்றில் சுயேட்சையாக செயல்படபோவதாகவும் , எதிர்காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்ல நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.அதேநேரம் நுவரேலிய மாவட்டதிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள திகாம்பரம் அவர்களும் பாராளுமன்றில் சுயமாக இயங்கப்போவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசுக்கும் எமது கட்சிக்கும் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த சில ஊடகங்கள் சதி - முதலமைச்சர் சந்திரகாந்தன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலிலே எமது கட்சியின் உயர்மட்டம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே நாம் தனித்து போட்டியிட்டோம். இதனால் எமக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் எவ்வித உண்மையும் இல்லை. தொடர்ந்து நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து கிழக்கின் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நவீன மயப்படுத்தப்படவுள்ள மட்டு பேருந்து நிலையம் -கிழக்கு முதல்வர் நடவடிக்கை.


மட்டக்களப்பு பொது பேருந்து நிலையம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் நிமித்தம் மஹிந்த சிந்தனையின் நெக்டப் வேலைத்திட்டத்தின் கீழ் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும், 01।05।2010 அன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.








இங்கிலாந்து நாட்டு கோடீசுவரர்களில் முதல் இடத்தில் லட்சுமி மிட்டல்..!

இங்கிலாந்து நாட்டு கோடீசுவரர்களில் இந்த ஆண்டும் முதல் இடத்தை இந்தியரான லட்சுமி மிட்டல் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 6-வது ஆண்டாக அவர் தொடர்ந்து இங்கிலாந்து கோடீசுவரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டு சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதோடு இங்கிலாந்தில் ஆயிரம் கோடீசுவரர்கள் இருப்பதாகவும், அது பட்டியலிட்டு உள்ளது.லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் பிறந்த சுரங்கத் தொழில் அதிபர் அனில் அகர்வால் 60 இடங்கள் முன்னேறி 10-வது இடத்துக்கு வந்து இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 3 ஆயிரம் கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கிலாந்து நாட்டு பணக்காரர்களில் 245-வது இடத்தில் இருக்கிறார். அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 100 கோடி ரூபாய் உயர்ந்து உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 1450 கோடி ரூபாய் ஆகும்.

நித்யானந்தா பெண் சீடர்களிடம் போட்ட ஒப்பந்தம்


பிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு

பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி மீராமக்காம் பள்ளி, கிருஸ்தவ தேவாலயம் தலதா மாளிகை,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்கும் சென்று நல்லாசி பெற்றார். கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை நடந்துடன் அவர் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மீராமக்கம் பள்ளியிலும் துவா பிராத்தனை இடம் பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அங்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.பிரதமருடன் அவரது துனைவியார் மகன்,மகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களான அமைச்சர் பர்டி பிரேமலால் திசாநாயக்க,அமைச்சர் துமிந்த திசாநாயக்க மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்

நித்யானந்தா ஆசிரம சீடர்கள் உடையில் அதிரடி மாற்றம்..!

நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறிவிட்டது. அங்கு இருந்த ஆண், பெண் சீடர்கள் காவி உடைக்கு பதிலாக சுடிதாரிலும், பேன்ட்-டி சார்ட்டிலும் வலம் வருகிறார்கள்.பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவிடம் சீடர்களாக உள்ளனர். நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகும், அவரது சீடர்கள் பலர் ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.நித்யானந்தா கைது செய்யப்படுவதற்கு முன்பு பிடதி ஆசிரமத்தில் தினமும் தியான வகுப்புகள், யோகா வகுப்புகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும். மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், வி.ஐ.பி.க்கள் என்று பலர் வந்து நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சென்றார்கள்.ஆனால் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கு யாரும் வருவதில்லை. முன்பு ஆசிரமத்தில் தங்கி இருந்த நித்யானந்தாவின் சீடர்கள் காவி உடைந்து வலம் வரும்போது, அது ஒரு மடம் போல் காட்சி அளித்தது. தற்போது பிடதி ஆசிரமம் களை இழந்து காணப்படுகிறது.அப்போது ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடைந்து அணிந்தும், பெண் சீடர்கள் வெள்ளை சேலை அணிந்து இருப்பதும்தான் வழக்கம். ஆனால் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது.தற்போது ஆசிரமத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடையை கழற்றி வீசி விட்டு கல்லூரி மாணவர்கள் போல் பேன்ட்-டீசர்ட் அணிந்து வலம் வருகிறார்கள். இதேபோல் பெண் சீடர்கள் வெள்ளை சேலைகளுக்கு பதிலாக வண்ண, வண்ண சுடிதார்களில் கல்லூரி மாணவிகள் போல் ஆசிரமத்தை சுற்றி வருகின்றனர். நித்யானந்தாவின் கைதுக்கு பிறகும், அவரை பற்றி தொடர்ந்து வரும் செக்ஸ் புகார்களை தொடர்ந்து சீடர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றி

பல்கேரியாவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்கேரிய வீரர் வெசலின் டோபலோவை இரண்டாவது ஆட்டத்தில் வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
12 ஆட்டங்கள் கொண்ட இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போது இருவரும் 1- 1 என்று சமநில வகிக்கின்றனர்.
ஆனந்த் இதில் ராணி, சிப்பாயுடன் நகர்த்தலைத் துவங்கினார். இது சிக்கலான ஒரு துவக்க என்பதால் இரு வீரர்களின் நகர்த்தலும் எந்த ஒரு கூடுதல் நன்மைக்கும் இட்டுச் செல்லவில்லை.
முதலில் சிப்பாய் ஒன்றை வெட்டுக் கொடுத்தார் ஆனந்த். ஆட்டம் அப்போது டோபலோவ் சார்பாக இருந்தது. ஆனால் 15-வது நகர்த்தலில் திடீர் திருப்பமாக இருவரும் தங்களது ராணிகளை பரஸ்பரம் வெட்டிக் கோண்டனர்.
இதன் பிறகு ஆனந்த் சில எதிர்பாராத நகர்த்தல்களைச் செட்ய்தார். ஆனால் ஆட்டத்தின் 25-வது நகர்த்தலில் ஆனந்தின் பிஷப்பை தன் குதிரையை கொண்டு காலி செய்ய டோபலோவ் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைய ஆனந்தின் ஆட்டத்தில் வேகம் பிறந்தது.
அதன் பிற்கு ஆனந்தின் கட்டுப்பாடு ஆட்டத்தில் அதிகரிக்க டோபலோவ் வெறுப்படைந்தோ அல்லது தன் ஆக்ரோஷத்தைக் காண்பிக்கவோ 29-வது நகர்த்தலில் எப்படியாவது ஆனந்தின் யானையை காலி செய்ய முயன்றார். ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது.
கடைசியில் ராணி இல்லாத நிலையில் யானைகள்,குதிரை, பிஷப் ஆகியவற்றை கன கச்சிதமாக நகர்த்தி டோபலோவ் பகுதிக்குள் புகுந்து கடும் நெருக்கடி கொடுக்க, டோபலோவ் தனது காய்களை நகர்த்த முடியாமல் கட்டிப் போடப்பட்டார்.
கடைசியில் 38-வது நகர்த்தலில் டோபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

நள்ளிரவில் லலித்மோடி சஸ்பெண்ட் : பிசிசிஐ அதிரடி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவவிட்டுள்ளது. இதற்கு காரணமான லலித் மோடியை ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனைய தொடர்ந்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில், லலித்மோடி கலந்து கொள்வதை தடுப்பதற்காக, இறுதி போட்டி முடிந்ததும், நேற்று நள்ளிரவு அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். நிர்வாகம் நடத்தி வரும் 20/20 கிரிக்கெட் போட்டியில் பல ஆயிரம் கோடி பணம் புரள்கிறது. கொச்சி அணி ஏலம் விடப்பட்ட விவகாரத்தில் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கும், வெளியுறவு இணையமைச்சர் சசி தரூக்கும் இடையே நடந்த மோதலில் தரூரின் பதவி பறிபோனது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது மத்திய அரசின் கவனம் திரும்பி உள்ளது. மக்களவையில் நேற்று இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பின.ஐ.பி.எல் கொச்சி அணி ஏலத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் தலையிட்டதாகவும், அவரது தோழி சுனந்தா புஷ்கருக்கு ரூ.70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக பெற்றுத்தந்தார் எனவும் டுவிட்டர் இணையளத்தில் தகவல் வெளியிட்டார் லலித் மோடி. இந்த விவகாரம் பார்லிமென்ட்டில் பூதகரமாக வெடித்தது. இதனால், லலித்மோடியை பதவி விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியது. இதையடுத்து வேறு வழியில்லாமல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சசிதரூர். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நிலவுகிறது, கருப்பு பணம் விளையாடுகிறது என புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சகம் கூறியது. முதலில் லலித்மோடியின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியது. பின் நாடு முழுவதும் 8 முக்கிய நகரங்களில் உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர். லலித் மோடிக்கு 3 அணியில் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்ச்சையை ஆரம்பித்த லலித்மோடியே சர்ச்சையில் சிக்கியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், விளக்கம் அளிக்க 5 நாள் அவகாசம் வேண்டும் என கேட்டார் லலித் மோடி. 'ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் நான்தான். எனக்கு தெரியாமல் கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதம் என்றும், முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கிப் பாருங்கள்' என்றும் கூறினார். இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் லலித்மோடி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென, இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பேன் என லலித்மோடி நேற்று மாலை அறிவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில், 'ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டம் என் தலைமையில் நடக்கிறது. அப்போது, புகார்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.இது குறித்து கிரிக்கெட் வாரிய தலைவர்கள் சஷாங் மனோகர், நிர்வாகிகள் சீனிவாசன், ரத்னாகர் ஷெட்டி, நிரஞ்சன் ஷா ஆகியோர் நேற்று மாலை ரகசிய ஆலோசனை நடத்தினர். ஐ.பி.எல் சீசன்&3 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி மும்பையில் நேற்று இரவு நடந்தது. போட்டி முடிந்ததும், லலித் மோடிக்கு, பி.சி.சி.ஐ. சஸ்பெண்ட் நோட்டிஸ் அனுப்பியது. இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் லலித்மோடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி உத்தரவு நேற்று நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

16வது சார்க் உச்சி மாநாடு

16வது சார்க் உச்சி மாநாட்டிற்காக பூட்டான் நாட்டின் திம்பு நகர் தயாராகி வருகின்றது. திம்புவிலுள்ள பிரதான வீதியின் இரு மருங்கிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எட்டு நாட்டுத் தலைவர்களதும் வர்ண புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

மெக்அஃபி ஆன்ட்டி வைரஸ் கணினிகளை முடக்கியது


கணினி பாதுகாப்புக்கு சிறந்த ஒன்று என்று பெயர் வாங்கிய மெகாஃபி ஆன்ட்டிவைரஸ் இவ்வாரத்தில் புதிய அப்டேட் ஒன்றின் போது தனதுவாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலை உருவாக்கிவிட்டதற்காகமன்னிப்பு கேட்டிருக்கிறது.அப்டேட் செய்யப்பட்ட புதிய டாட் ஃபைல் ஒன்றின்காரணமாக பள்ளிகள் , மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என இந்தஆன்ட்டி வைரைஸை பயன்படுத்தும் பலர் இதனால் கடுமையாகபாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.விண்டோட்ஸ் எக்ஸ் பி கணினிகள் இதனால் க்ராஷ் ஆகுவதும் மீண்டும்மீண்டும் ரீ பூட் ஆகுவதுமாக இருந்திருக்கின்றன. SVCHOST.EXE என்கிறவிண்டோஸ் கோப்பை தவறான வைரஸ் என்று ஆன்ட்டி வைரஸ் கணக்கில் எடுத்தால்நிகழ்ந்த தவறை நிவர்த்தி செய்ய சூப்பர் டாட் ரெமிடேசன் டூல் என்ற ஒன்றைஉடனடியாக தயார் செய்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தளத்தின் உதவியைநாடியதால் வேறு ஒரு தனித்தளத்தில் எவ்வாறு கணினிகளை மீட்டெடுக்க வேண்டும்என தகவல்களை பதிவிட்டது.தவறு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே விரைவாக சரிசெய்யப்பட்டிருந்தாலும் இதுநிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கக்கூடிய செயலாகும். பாதிக்கப்பட்டகணினிகளான விண்டோஸ் எக்ஸ்பி எஸ் பி த்ரீ மாடல்ககளின் மீது தங்கள் புதியகோப்பை பரிசீலிக்காமல் விட்டதால் தவறு நிகழ்ந்ததாக கூறி இருக்கிறார்கள்.சன் பெல்ட் மென்பொருளாளர்கள் மெகஃபியின் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைகவர ஆறுமாத இலவச பாதுகாப்பை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால்அவர்களூம் இதுபோன்ற தவறுகள் நிகழாது என உறுதி கூறமுடியாது.

பழைய குருடி கதவ திறடி-ஆனந்த சங்கரி.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டவுடன் அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத வகையில் கருத்துக்களை வெளியிடுவது பழைய குருடி கதவ திறடி என்பது போல உள்ளதாகவும், தாம் தனி ஈழக் கொள்கையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது எனவும் ஓர் ஊடகத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துக்கள நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது வடக்கில் ஒழுங்கான முறையில் தேர்தல் இடம்பெறவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மிக அடக்குமுறையான விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகவும், தமது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒழுங்கான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட களத்தில் நிற்க அனுமதிக்க வில்லை எனவும் அதன் காரணமாகவே தமது கட்சி ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிநேகபூர்வ சந்திப்பு

முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிநேகபூர்வ சந்திப்பும், அவர்களின் விடுதலை தொடர்பாக உயர்பீடங்களுடன் பேச முடிவு.முதல்வரை முன்னாள் போராளிகள் கைதட்டி வரவேற்பும், தங்களை முதல் முதல் வந்து பார்வையிட்ட ஓர் அரசியல்வாதி தாங்கள் தான் எனவும் நன்றி தெரிவிப்பு.



கிழக்கு மாகண முதலமைச்சர் மயிலம்பாவெளி ஆலய விஜயம்.(படங்கள் இணைப்பு)








மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற மிகப்பிரமாண்டமான காமாட்சி அம்மன் ஆலயயத்தினை ஆலய நிருவாகிகளின் அழைப்பிற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று பாரர்வையிட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள்.




கிழக்கு தமிழ் மக்கள் எமது கட்சியை தூக்கி எறியவில்லை, கட்சித்த தலைவர் சி.சந்திரகாந்தன்.


நடைபெற்று முடிந்த 7வது பாரர்ளுமன்ற பொதுத் தேர்தலிலே கிழக்கு மாகாணத்திலே எமது கட்சி கிட்டத்தட்ட 23500 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. நாம் எதிர் கொண்ட முதலாவது தேர்தலிலே இவ்வளவு பெருந் தொகை வாக்கு எமது கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இதனடிப்படையில் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எமது கட்சியினை தூக்கி எறியவில்லை என த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவாணி கலா மன்றம் ஒழுங்கு செய்திருந்த கலை நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் தற்போது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து மட்டக்களப்பு மாவட்டத்திலே மூன்று ஆசனங்களும் அம்பாறையில் ஒரு ஆசனமும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமாக மொத்தமாக ஐந்து ஆசனங்கள் பெற வழிவகுத்திருக்கின்றார்கள் இவ்வாறு வாக்களித்த மக்களுக்காக இத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏதாவது ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கில் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு அதிகப்படியான சேவைகளை வழங்க வேண்டும். 6வது நாடாளுமன்ற தேர்தலிலே 22 ஆசனங்களை வைத்துக்கொண்டு எதனையுமே செய்யவில்லை ஆனால் தற்போது வெறுமனே 14 ஆசனங்கள்தான் கிடைத்திருக்கின்றது இதனை வைத்துக்கொண்டாவது ஏதாவது நடைமுறைச்சாத்தியமான விடயங்களைப் பற்றி பேசி எமது மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டுவர இவர்கள் உழைக்க வேண்டும் அவ்வாறு செய்வார்களாக இருந்தால் கிழக்கில் உள்ள ஓர் தமிழ் கட்சியின் தலைவர் என்ற வகையில் நான் முதலில் மகிழ்ச்சியடைவேன் எனவும் குறிப்பிட்டார்.ஓட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்திலே 23அயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் எமது கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலிலே 43 ஆயிரத்திற்கு மேல் எனக்கு வாக்களித்து முதலமைச்சராக்கி இருக்கின்றார்கள் எனவே இம்மக்களுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். வாக்களித்த மக்கள் மாத்திரமன்றி கிழக்கில் இருக்கின்ற அனைத்து மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு மிகவும் அழகானதும் அனைத்து துறைகளிலம் சிறந்த ஓர் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற நான் முழுமையாக பாடுபடுவேன். ஆதற்கு எமது மக்கள் பூரண ஆதரவினை இனிவருகின்ற காலங்களில் வழங்க வேண்டம் எனக் கேட்டுக்கொண்டார்.

காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது.

கிழக்கு மாகாண முதலமைச்சர்.
காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது. அன்றும் சரி இன்றும் சரி இக்கூட்டமைப்பினது அரசியல் பிரவேசமானது தமிழ் தேசியத்தின் உருவாக்கமாகவே அமைந்திருந்தது. ஆனால் அது எமது தமிழ் மக்களுக்கு கற்பனைக்குக் கூட எட்டாததாக ஒன்றாக இருக்கின்றது. அதனையே இவர்கள் அடைய முயற்சிககிறார்கள். போராட்ட காலங்களில் தனித் தமிழீழம் என்றார்கள், இன்று வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்றார்கள். இதே போன்று பல அடைய முடியாத இலட்சியங்களுக்காய் காலங் காலமாக குரல் கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15.04.2010) இரவு மட்டக்களப்பு வாடிவீட்டில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தமது கட்சி எதிர் கொண்ட முதலாவது நாடாளுமன்றத் தேர்தலிலே குறிப்பிட்டளவு வாக்கினை பெற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் தற்போதைய இந்த ஜனநாயகச் சூழலில் நாம் கிழக்கில் பாரியளவு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றோம். அவ்வாறு இருந்தும் கூட எதுவுமே எமது மக்களின் நலன்களில் பங்கெடுக்காத கூட்டமைப்பினருக்கு எமது மக்கள் மீண்டும் ஆணை வழங்கியிருப்பது ஓரளவு வேதனையளிக்கின்றது. இவர்களால் கிழக்கு மாகாண மக்களுக்கு எதுவுமே செய்ய இயலாது. மீண்டும் அவர்கள் தனித் தேசியம், வடக்கு கிழக்கு இணைப்பு என நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையே பேசிப் பேசி காலத்தை கடத்துவார்களே தவிர, வேறு எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் அவர்கள் எமது மக்களுக்குச் செய்ய மாட்டார்கள் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாம் ஓர் விடயத்தினை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதாவது தற்போது கூட்டமைப்பின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் வடக்கு கிழக்கு இணைப்பினை முதன்மை படுத்தி தமது பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கும் கூட்டமைப்பினருக்கும் நான் ஓர் விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது நடந்து முடிந்த தேர்தலை ஓர் பரீட்சாத்தமான தேர்தலாக நோக்குவோமாயின், அதாவது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான சர்வசன வாக்கெடுப்பு தேர்தலாக இதனை நோக்குவோமாயின் கூட மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 994இ612 பேர்உள்ளனர். இதில் மட்டக்களப்பில் 333இ644 பேரும், திருகோணமலையில் 241இ133 பேரும் அம்பாறையில் 420இ835 பேரும் இருக்கின்றார்கள். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 66235 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களையும் திருகோணமலையில் அண்ணளவாக 28892 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் (முழுமையான தேர்தல் முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அம்பாறையில் 26895 வாக்குகளை பெற்று ஒரு ஆசனமாக மொத்தமாக ஐந்து ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே மொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 120922 ஆகும். எனவே கிழக்கில் இருக்கின்ற மொத்த தமிழர்களிலே இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களை வைத்து ஒப்பிடும்போது கூட தெளிவாக விளங்குகின்றது வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஆணை இதுவென அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் விகிதாசார ரீதியாக ஒப்பிட்டு நோக்குகின்ற போது த.தே.கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கின்ற விகிதாசாரம் 12.14ஆகும். எனவே இதனை வைத்துக் கொண்டு இவர்கள் குறிப்பிடமுடியாது. எனவே இதனை அனைத்து சமூகமும் தெளிவாக சிந்தித்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணம் வடமாகாணத்தைப் போல் தனியான தமிழ் பிராந்தியம் அல்ல. மாறாக தமிழர்கள், சிங்களவர்கள் ,முஸ்லிம்கள் என மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்ற மாகாணம் ஆகும். ஆகவே மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற வாக்காளர்கள் தொகை 995612 பேராகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்ககள் வெறுமனவே 120922 ஆகும். எனவே இந்த விகிதாசார அடிப்படையில் பார்த்தால் கூட அவர்கள் சொல்வதனைப் போன்று வடகிழக்கு இணைப்பிற்கான ஆணை கிடைக்க வில்லை. இவர்கள் பல நெடுங்காலமாக இவ்வாறாக அடைய முடியாத இலக்குகளை அடைவதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படத்திய வரலாறுகள் எமக்கு தெரிந்தவைகளே. எனவே தற்போது முடிவடைந்திரக்கின்ற தேர்தல் முடிவினை வைத்துக் கொண்டு த.தே.கூட்டமைப்பும் அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயற்படுகின்ற குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் வடகிழக்கு இணைப்பு தொடர்பாக கதைப்பதற்கு தகுதி அற்றவர்களே என்பதனையே தெளிவாக நான் எடுத்துக் கூறுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்டுகையில், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் எனக்கூறும் இத் தேசிய கூட்டமைப்பினர், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையே ஏற்காதவர்களாகச் செயற்படுகின்றமை மிகவும் வேதனையளிக்கின்றது. அதாவது வடக்கு கிழக்கு நிருவாக ரீதியாக பிரிக்கப்படுகின்றது என்கின்ற தீர்ப்பினை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத இக் கூட்டமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது எவ்வளவு வேடிக்கை என்பதனை அனைத்து அரசியல் ஆர்வலர்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக கிடைத்திருக்கின்ற குறைந்த பட்ச தீர்வு என்றால் அது மாகாண சபை முறைமைதான். மாகாண சபை முறைமை கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே போல் வடக்கிலும் ஏற்படுத்தப்படுமாயின் ஓர் தமிழர் முதலமைச்சராக வரமுடியும். எனவே அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம் ஓங்க இவை வழிவகுக்கும். இதனை எல்லாம் லிடடு விட்டு வடக்கு கிழக்கு இணைப்புத்தான் இன்று எமது தமிழ் மக்களுக்கான தீர்வு என இக் கூட்டமைப்பினர் கூறுவது ஒருபுறம் வேதனையளித்தாலும், அது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நடக்க முடியாத ஒன்றாகும். நான் ஏற்கனவே கூறியது போல கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடந்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் பிரகாரம் பார்க்கின்ற போது அது நடக்கமுடியாத ஒன்றாகும். இவர்களது இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒன்று மட்டும் புலனாகின்றது அதாவது தாங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் அரசியல் ஏகபிரதிநிதிகள் அவர்களே காலங் காலமாக இருக்க வேண்டும் என்பததான் அவர்களினது எண்ணப்பாடாகும். கிழக்கில் நிலையான அரசியல் தலைமை உருவாவதனை அவர்கள் விரும்பவில்லை என்பது எனது எண்ணப்பாடாகும். இதனூடாக நான் பிரதேசவாதம் பேசவில்லை. காலங்காலமாக எமது மக்களை இவ்வாறாகத்தான் இந்த த.தே.கூட்டமைப்பினரும் அதன் அரசியல் தலைமைகளை வழிநடத்தியிருக்கின்றார்கள். இதனை எல்லாம் இனிவரும் காலங்களிலாவது குறிப்பாக எமது கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலங்கையில் செயற்படுகின்ற தமிழ் ஊடகங்களை நினைத்தால்கூட மிகவும் கவலையளிக்கின்றது. அதாவது எந்த ஒரு நடுநிலைத் தன்மையும் பேணாது உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தாது குறிப்பிட்ட ஒரு சில தமிழ் ஊடகங்களில் இத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏவலாளிகள் போல் செயற்பட்டு தங்களது செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுகின்ற போது மக்கள் குழப்பமடைகின்றார்கள். எனவே இது போன்ற செயற்பாடுகளை இனிவருகின்ற காலங்களிலாவது நிறுத்தி பத்திரிகை தர்மத்தினை பேணி நம்பகத் தன்மையானதும் யதார்த்தபூர்வமான உண்மைகளையும் கட்சி பேதங்களுக்கு அப்பால் வெளியிட்டு எமது மக்களையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்த இவ் ஊடகங்கள் செயற்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன். விசேடமாகச் சொல்லப்போனால் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உள்ள ஒரு வாரத்திற்குள் வெளிவந்த குறிப்பிட்ட சில பத்திரிகைச் செய்திகளை எடுத்துப்பார்த்தால் நான் ஏலவே குறிப்பிட்ட விடயங்கள் புலனாகும். தலைப்பு செய்திகள் கூட விதிவிலக்கல்ல.
எனவே இத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதிகளுக்கும் அவ் அரசியல் தலைமைகளுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வளவு காலமும் எமது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் போதும் இனிவரும் காலங்களிலாவது அவர்கள் நிம்மதியாக வாழ வழி சமைத்துக் கொடுங்கள். ஏலவே 22 பாரர்ளுமன்ற உறுப்பினர்களை வைத்து எதையுமே சாதிக்கவில்லை தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஏதாவது செய்ய முயற்சியுங்கள் எனவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்,நகைச்சுவை.

பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால், நிறுவனர் கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
நன்றி இணையத் தமிழ் உலகம்.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 67 பேர் பலி


சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குறைந்தது 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பூகம்பத்தால் குறைந்தது 67 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தெரிகிறது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.குவின்காய் மாகாணத்தின் ஜீகூ நகரில் இருந்து 30 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அவரிடம் கை குலுக்கி 5 நிமிடங்கள் பேசினார்.அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்காக 47 நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு அதிபர் ஒபாமா விருந்தளித்துக் கெளரவித்தார்.இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சியில் சற்று தள்ளி இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் அமர்ந்திருந்தனர்.அப்போது கிலானி தனது இருக்கையிலிருந்து எழுந்து பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி வந்தார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் புனமுறுவலுடன் வரவேற்றார். இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு 5 நிமிடங்களே நீடித்தது

புதுவருட நல்வாழ்த்துக்கள்.


விருத்தியை பார்வையிடும் அனைத்துலக நண்பர்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.
viruththy.blogspot.com

கிழக்கு மாகாண முதலமைச்சரின் புதுவருட வாழ்த்துச் செய்தி


மலர்ந்திருக்கின்ற தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். முப்பது வருடகாலம் அனைத்துத்துறைகளிலுமே பின்நோக்கிச் சென்றிருந்தோம். ஆனால் இன்று அவை அனைத்திலும் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இன ஐக்கியத்தோடு கூடிய அபிவிருத்தியினை நாம் அனைவரும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
இன்று மலர்ந்திரக்கின்ற இச் சித்திரைப் புத்தாண்டினை அனைவரும் மிகவும் மனநிறைவுடன் கொண்டாடி மகிழ்ந்து, எதிர்காலத்தில் எமது நாடு அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும் எனக் கேட்டக்கொள்கின்றேன். மேலும் இனமத பேதங்களைக் கடந்து நல்லுறவுடன் கூடிய அரோக்கியமான ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப இச் சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் வழி வகுக்கும் எனக் கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

பேருந்து ஓட்டுனர்களால் புறக்கணிக்கப்படும் மாணவர்களும் பாதிக்கப்படும் கல்வியும்.


எமது நாட்டை பொறுத்தவரையில் ஒரு வளர்முக நாடாக இருப்பினும் கல்வியில் சிறந்த நாடாக காட்டப்படுகின்றது. எமது நாட்டில் கல்வி பயில்கின்ற மாணவர்களில் பெரும்பாலான அனைவரும் கல்வி கூடங்களுக்கு செல்வதற்காக பேருந்துகளையே நம்பி இருக்கின்றமை யாரும் மறுக்க முடியாத விடையமாகும், ஆனால் எமது அரச பேருந்து ஓட்டுனர்களும் சரி தனியார் பேருந்து ஓட்டுனர்களாக இருப்பினும் சரி மாணவர்களை அவர்களின் எதிர்கால கல்வி அபிவிருத்திக்காக தாம் ஒரு சிறு துளியேனும் உதவுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறியாகவே உள்ளது. கடந்த சில காலமாக கிழக்கில் யுத்தம் ஓய்ந்து மக்கள் அன்றாட வாழ்கையினை அமைதியாக கொண்டு செல்லும் வேளையில் தமது குழந்தைகளையும் நம்பிக்கையோடு தனிமையில் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகின்ற சூழலில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளமை மிகவும் மன வேதனைக்குரிய விடையமாகும். இவற்றுக்கு தற்போது புதிதாக உருவாகியுள்ள பேருந்து ஓட்டுனர்களிடையே ஏற்பட்டுள்ள போட்டியான சூழ்நிலையே காரணமாக கரதப்படுகின்றது. ஒரு மாணவன் பேருந்துக்காக காத்திருந்து கொண்டிருக்கும் போது அவனை கடந்து பல பேருந்துகள் செல்கின்றபோதும் அம்மாணவனையோ மாணவியையோ பேருந்து ஓட்டுனர்களால் ஏற்றிச் செல்ல முடியவில்லை இதனால் அம்மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் நேரத்திற்கு தமது கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளாமைக்கும் எமது சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கும் இவர்கள் காரணமாக இருப்பது வெட்கப்படவேண்டிய விடயமாக உள்ளது. பேருந்த ஓட்டுனர்களே இது உங்களின் கவனத்திற்கு நீங்களும் ஒரு சமூக சேவகர்கள்தான் உங்கள் சேவையும் எமது சமூத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது அதனை நீங்கள் சரியான முறையில் செய்வீர்களானால் எமது மாணவ சமூதாயம் முன்னேற்றமடைவதுடன் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டதாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உமது சேவையை செய்ய வேண்டும் என விருத்தி கேட்டுக்கொள்கின்றது.

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!


ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!

படத் தலைப்புகளை எப்படி கொடுப்பார்.....??

ஒரு சின்னக் கற்பனை.....

ஜி மெயில் சன் ஆப் இ மெயில்.....

ராம் தேடிய மதர் போர்ட்...

7 ஜி கூகுள் காலனி....

எனக்கு 20 எம் பி உனக்கு 18 எம் பி......

புதுக் கோட்டையிலிருந்து பெண்டியம் 4........

காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க.......

ஹார்ட் டிஸ்குக்கு மரியாதை.......

வைரசை வேட்டையாடு விளையாடு.....

கீ போர்டும் நானும்......

ஜோய்ச்டிக் விளையாடல்.....

சொல்ல மறந்த பாஸ்வர்ட்.....

எங்க ஊரு ப்ரோக்ராமர்.........

ஒரு மவுசின் கதை .......

மானிட்டருக்குள் மழை.....

எல்லாம் ப்ரொஸெஸர் செயல்......

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்!


விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை நாசா அனுப்பியுள்ளது.இதன் மூலம் விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெண்மணிகள் இருக்கப்போகிறார்கள். விண்வெளியிலும் தங்கள் உரிமையை நிலைநாட்டி விடுவார்கள் பெணகள் என நாசா விஞ்ஞானிகள் வேடிக்கையாக பேசி வருகிறார்கள்.ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று புறப்பட்ட டிஸ்கவரி விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மெட்காஃப் லிண்டென்பர்கெர் மற்றும் ஸ்டெஃபானி வில்சன், ஜப்பானைச் சேர்ந்த நவோக்கா யமாஸாகி ஆகியோர் விண்வெளிக்கு பயணமானார்கள்.ஏற்கனவே இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை விண்வெளி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க பெண்மணி டிரேசி கால்ட்வெல் டைசன் தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ளார்.இவருடன் சேர்த்து நான்கு பெண்களும் மெஜாரிட்டி பலத்துடன் விண்வெளி நிலைய வேலைகளை கவனிக்கப் போகிறார்கள். முடிவு பெறும் நிலையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறுதிகட்டப் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். 13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு சோதனைகள் மற்றும் பழுது நீக்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.ஒரே நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு பெண்கள் தங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

வரலாறு காணாத மாபெரும் அரசியல் பிரச்சாரக் கூட்டம் மட்டக்களப்பில்.




கிழக்கு மாகாணத்தில் தனிப்பெரும் கட்சியாக பரிணமித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதனை முன்னிட்டு தனது இறுதிப்பிரச்சாரக் கூட்டத்தினை மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமத்தில் வரலாறு காணாத வகையில் பிரமாண்டமான முறையில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றுதான் அங்கு சென்றிருந்த எனக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்களும் அரசியல் ஆர்வம் கொண்டுள்ளதை உணர முடிந்ததது.

மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அங்கத்தவத்தினை பெற்ற இளைஞர் யுவதிகள்.


இதுவரை காலமும் தமக்கென ஒரு நிலையான அரசியல் பலம் இல்லாமல் இருந்த குறையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மாற்றியமைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவிப்பு.





இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்பு ஒன்றுகூடல் ஒன்றின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் த.ம.வி.பு கட்சியின் அங்கத்துவத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் த.ம.வி.பு கட்சி தனித்த போட்டியிடுகின்ற அதே வேளை தனது மாபெரும் மக்கள் வெள்ளம் திரண்ட இறுதி பிரச்சாரக் கூட்டத்தினையும் நிறைவு செய்துள்ளது. கட்சியின் கொள்கை உறுதிப்பாடு என்பவற்றை புரிந்துகொண்டு. மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பல இளைஞர் யுவதிகள் மற்றும் முதியவர்கள், தாய்மார்கள், என பலரும் இன்று தமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்ப ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து தமது அங்கத்தவத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





சமன் செய்யப்படாத சாபம்.


சொகுசான கடைமுன்னே தர்மம் ஏந்தும் மூதாட்டி கடைக்குள் சென்று வந்தவனிடம் தர்மம் கேட்ட மூதாட்டியிடம் கொடுக்க சில்லறை பணம் இல்லை, நாளை தருகின்றேன் பாட்டி பதில் சொல்லிவிட்டு சென்றவனுக்கு பாட்டி ஏதாவது தன்னைப்பற்றி குறையாக எண்ணிவிடுவாரோ என்று மனதில் ஒரு சஞ்சலம், வைத்திருக்கும் பெரிய தொகைக்கு ஏதாவது வாங்கிவிட்டு மீதிச்சில்லறையில் பாட்டிக்கு தர்மம் செய்ய மீண்டும் கடைக்குள் புகுந்து தன் நண்பர்களுக்கு குளிர்பானங்கள் வாங்கிவிட்டு மீதிப்பணத்தில் ஒரு தொகை பாட்டி எதிர்பார்க்காத வகையில் (வேறு ஒருவரிடம் தர்மம் கோரும் வேளையில்) அவரின் கைகளில் வைத்தவனை திரும்பி பார்த்த பாட்டி மனதார வாழ்த்தினார் ஆனால் அவருக்கு இவன் ஏற்கனவே தனக்கு தர்மம் செய்யாதவன் என புரியவில்லை. இதனால் பாட்டியை பொறுத்தவரை முதல் தெரிந்தவன் தனக்கு தர்மம் செய்யதவன் தற்போது தர்மம் செய்பவன் புதியவன் இதனால் அனுக்கு விடுக்கப்பட் சாபம் சரி செய்யப்படவில்லை செய்யப்படவில்லை என்பதுவே வேடிக்கை.

இலவச மருத்துவ முகாம்,


அணுசரணை கிழக்கு மாகாண முதலமைச்சர். சிவநேசதுரை சந்திரகாந்தன்.