கேன்ஸ் பட விழா படு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் அழகுமிகு நடிகை யான ஐஸ்வர்யா ராய் படு ஸ்டைலிஷான உடையில் வந்து கேன்ஸ் விழாவையே கலக்கி விட்டார்.63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார்.விழாவின் தொடக்கமாக வெளியிடப்பட்ட ரிட்லி ஸ்காட்டின் ராபின் ஹூட் பட வெளியீட்டுக்கு ஐஸ்வர்யா படு ஒய்யாரமாக வந்து சேர்ந்தார். கலங்கடிக்கும் லேவண்டர் கலர் கவுன் அணிந்து வந்த 36 வயதான ஐஸ்வர்யா அனைவரின் கண்களையும் கவர்ந்தார். கடந்த ஆண்டும் கூட படு கலக்கலான உடை மற்றும் மேக்கப்புடன் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஐஸ்வர்யாவுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இணைந்து வரவில்லை. மாறாக ஹாலிவுட் நடிகை ஈவா லோங்கோரியா உடன் வந்திருந்தார்.இரு அழகான நடிகைகளும் படு ஸ்டைலிஷாக வந்தது கேன்ஸ் விழாவுக்கு புதுக் களையைக் கொடுத்தது.
கேன்ஸ் பட விழா படு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் அழகுமிகு நடிகை யான ஐஸ்வர்யா ராய் படு ஸ்டைலிஷான உடையில் வந்து கேன்ஸ் விழாவையே கலக்கி விட்டார்.63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார்.விழாவின் தொடக்கமாக வெளியிடப்பட்ட ரிட்லி ஸ்காட்டின் ராபின் ஹூட் பட வெளியீட்டுக்கு ஐஸ்வர்யா படு ஒய்யாரமாக வந்து சேர்ந்தார். கலங்கடிக்கும் லேவண்டர் கலர் கவுன் அணிந்து வந்த 36 வயதான ஐஸ்வர்யா அனைவரின் கண்களையும் கவர்ந்தார். கடந்த ஆண்டும் கூட படு கலக்கலான உடை மற்றும் மேக்கப்புடன் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஐஸ்வர்யாவுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இணைந்து வரவில்லை. மாறாக ஹாலிவுட் நடிகை ஈவா லோங்கோரியா உடன் வந்திருந்தார்.இரு அழகான நடிகைகளும் படு ஸ்டைலிஷாக வந்தது கேன்ஸ் விழாவுக்கு புதுக் களையைக் கொடுத்தது.
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள்மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஒபாமாவை கர்சாய் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தான் எல்லையில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் எனும் புற்றுநோய் அந்நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் பாகிஸ்தானின் எதிரியாக இந்தியா இருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தால் தான் அந்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பழைய சந்தேகங்களையும், மோசமான பழக்கங்களையும் ஒழித்து பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைத்து, ஆப்கானிஸ்தானில் ஸ்திரமான நிலையை உருவாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் பயங்கர வாதத்தை வேரறுக்க வேண்டும். பயங்கர வாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பாகிஸ்தான் பாதுகாப்பாக இருந்தால் தான் அண்டை நாடான ஆப்கனும் பாதுகாப்பாக இருக்கும்.
பயங்கவராதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக்கொள்ள பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளது. ஒரே நாளில் இந்த விஷயத்தில் வெற்றி கிட்டிவிடாது. இந்த நடவடிக்கை யால் ஏராளமான உயிர்சேதம் ஏற்படும். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதிகள்தான் அல்- குவைதா மற்றும் தலிபான்களின் சதி ஆலோசனை மையமாக விளங்குகிறது இவ்வாறு ஒபாமா கூறினார்.

குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் ஒருசில இடங்களில் இடம்பெற்றிரு ப்பதனால் பெற்றோர் சமீப தினங்களாக பீதிய டைந்துள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மாண வன் ஒருவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட் டமை ஞாபகமிருக்கலாம். அதன் பின்னர் அடுத்தடு த்து ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனால் பெற் றோர் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவலை யடைந்துள்ளனர்.
களனியில் கடத்தப்பட்ட குழந்தையொன்று மாரவில பகு தியில் வைத்து மீட்கப்பட்டதையடுத்து அக்கடத்தலின் பின்னணி அம்பலத்துக்கு வருமென எதிர்பார்க்கப்ப டுகிறது. அக்குழந்தையைக் கடத்திச் சென்றவர் ஒரு வயோதிபப் பெண் ஆவார். பொதுமக்கள் மற்றும் ஊட கங்கள் தரப்பிலிருந்து கிடைத்த ஒத்துழைப்பு காரண மாகவே இக்குழந்தையை மீட்க முடிந்துள்ளது.
இக்குழந்தை கடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரம் உண்மையிலேயே பாராட்டத் தக்கது. ஊடகங்களின் ஒத்துழைப்பு காரணமாகவே அக் குழந்தையை பொதுமகன் ஒருவரால் அடையாளம் காண முடிந்துள்ளது.
கடத்தப்பட்ட குழந்தையை அடையாளம் கண்டவுடன், உட னடியாக அக்குழந்தையையும் சந்தேகத்துக்கிடமான பெண்ணையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவரின் சமூக நேயத் தன்மையைப் பாராட்டாம லிருக்க முடியாது. இச்செயல்களையெல்லாம் சிறந்த முன்னுதாரணங்களாகக் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க அக்குழந்தை கடத்தப்பட்டதற்கான நோக்கம் இதுவரை வெளிவரவில்லை. இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அந்தரங்கமாக நடைபெற்று வருவதனாலேயே தகவல்களை அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.
குழந்தைகளைக் கடத்தும் கொடியவர்களின் நோக்கம் கப்பம் பெறுவதற்காக இருக்கக்கூடுமென ஊகிக்கப்ப டுகிறது. குழந்தைகளைக் கடத்திச் சென்று பெற்றோரி டம் கப்பம் கோரிய ஓரிரு சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன. சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவங் களும் ஞாபகமிருக்கலாம். இச்சம்பவங்களில் சம்பந்த ப்பட்ட குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்திரு ந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் நீண்ட காலமாகத் தணிந்தி ருந்தன. தற்போது அக்கொடியவர்கள் மீண்டும் குழந் தைகளின் உயிருடன் விளையாடத் தொடங்கியுள்ள னர். இதனை எவருமே அனுமதிக்கலாகாது. பொலி ஸார் இவ்விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் பொதுமக்களும் இது சம்பந்தமாக பொலி ஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள் வழங்குகின்ற தகவல்கள் பொலிஸாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென் பது உண்மை.
குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் பொறுப்புடன் இரு க்க வேண்டியவர்கள் பெற்றோரேயாவர். பாடசாலை க்கோ அல்லது தனியார் வகுப்புக்கோ பிள்ளைகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. அது மாத் திரமன்றி நம்பிக்கைக்குரிய நபர் தவிர்ந்த வேறு எவ ருடனும் பிள்ளைகளை வெளியிடங்களுக்கு அனுப் புவதும் தவறு. குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது பெற்றோருக்கு அவதானம் அவசியம்.
குற்றவாளிகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குற்றச்செ யலுக்கான சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுத் துவிடலாகாது.

