விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றி

பல்கேரியாவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்கேரிய வீரர் வெசலின் டோபலோவை இரண்டாவது ஆட்டத்தில் வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
12 ஆட்டங்கள் கொண்ட இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போது இருவரும் 1- 1 என்று சமநில வகிக்கின்றனர்.
ஆனந்த் இதில் ராணி, சிப்பாயுடன் நகர்த்தலைத் துவங்கினார். இது சிக்கலான ஒரு துவக்க என்பதால் இரு வீரர்களின் நகர்த்தலும் எந்த ஒரு கூடுதல் நன்மைக்கும் இட்டுச் செல்லவில்லை.
முதலில் சிப்பாய் ஒன்றை வெட்டுக் கொடுத்தார் ஆனந்த். ஆட்டம் அப்போது டோபலோவ் சார்பாக இருந்தது. ஆனால் 15-வது நகர்த்தலில் திடீர் திருப்பமாக இருவரும் தங்களது ராணிகளை பரஸ்பரம் வெட்டிக் கோண்டனர்.
இதன் பிறகு ஆனந்த் சில எதிர்பாராத நகர்த்தல்களைச் செட்ய்தார். ஆனால் ஆட்டத்தின் 25-வது நகர்த்தலில் ஆனந்தின் பிஷப்பை தன் குதிரையை கொண்டு காலி செய்ய டோபலோவ் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைய ஆனந்தின் ஆட்டத்தில் வேகம் பிறந்தது.
அதன் பிற்கு ஆனந்தின் கட்டுப்பாடு ஆட்டத்தில் அதிகரிக்க டோபலோவ் வெறுப்படைந்தோ அல்லது தன் ஆக்ரோஷத்தைக் காண்பிக்கவோ 29-வது நகர்த்தலில் எப்படியாவது ஆனந்தின் யானையை காலி செய்ய முயன்றார். ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது.
கடைசியில் ராணி இல்லாத நிலையில் யானைகள்,குதிரை, பிஷப் ஆகியவற்றை கன கச்சிதமாக நகர்த்தி டோபலோவ் பகுதிக்குள் புகுந்து கடும் நெருக்கடி கொடுக்க, டோபலோவ் தனது காய்களை நகர்த்த முடியாமல் கட்டிப் போடப்பட்டார்.
கடைசியில் 38-வது நகர்த்தலில் டோபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

0 comments: