நித்யானந்தா ஆசிரம சீடர்கள் உடையில் அதிரடி மாற்றம்..!

நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறிவிட்டது. அங்கு இருந்த ஆண், பெண் சீடர்கள் காவி உடைக்கு பதிலாக சுடிதாரிலும், பேன்ட்-டி சார்ட்டிலும் வலம் வருகிறார்கள்.பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவிடம் சீடர்களாக உள்ளனர். நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகும், அவரது சீடர்கள் பலர் ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.நித்யானந்தா கைது செய்யப்படுவதற்கு முன்பு பிடதி ஆசிரமத்தில் தினமும் தியான வகுப்புகள், யோகா வகுப்புகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும். மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், வி.ஐ.பி.க்கள் என்று பலர் வந்து நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சென்றார்கள்.ஆனால் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கு யாரும் வருவதில்லை. முன்பு ஆசிரமத்தில் தங்கி இருந்த நித்யானந்தாவின் சீடர்கள் காவி உடைந்து வலம் வரும்போது, அது ஒரு மடம் போல் காட்சி அளித்தது. தற்போது பிடதி ஆசிரமம் களை இழந்து காணப்படுகிறது.அப்போது ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடைந்து அணிந்தும், பெண் சீடர்கள் வெள்ளை சேலை அணிந்து இருப்பதும்தான் வழக்கம். ஆனால் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது.தற்போது ஆசிரமத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடையை கழற்றி வீசி விட்டு கல்லூரி மாணவர்கள் போல் பேன்ட்-டீசர்ட் அணிந்து வலம் வருகிறார்கள். இதேபோல் பெண் சீடர்கள் வெள்ளை சேலைகளுக்கு பதிலாக வண்ண, வண்ண சுடிதார்களில் கல்லூரி மாணவிகள் போல் ஆசிரமத்தை சுற்றி வருகின்றனர். நித்யானந்தாவின் கைதுக்கு பிறகும், அவரை பற்றி தொடர்ந்து வரும் செக்ஸ் புகார்களை தொடர்ந்து சீடர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: