போக்குவரத்ததுச் சேவையே பின்தங்கிய கிராமங்களை கட்டியெழுப்பும்-கி.மா.ச.உ.பூ. பிரசாந்தன்.

வைத்தியசேவையானாலும், கல்விச் சேவையானாலும், சமூக சேவையானாலும் கிராமப்புறங்களைச் சென்றடைய வேண்டுனாமால் போக்குவரத்துச் சேவை மிகவும் அத்தியாவசியமானதாகவுள்ளது. பட்டிப்பளை பிரதேசமே, வாகரைப் பிரதேசமோ, வெல்லாவெளி, வவுணதீவு உள்ளிட்ட எல்லைக் கிராமங்களின் மக்களுக்கு வாழ்வாதாரம் அத்தியாவசிய தேவகைள் விஸ்தரிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் வைத்தியர்கள் ஏனைய உத்தியோகஸ்தர்கள் சேவை வழங்க முன்வருகின்ற போதும், போக்குவரத்து சேவையின் குறைபாடுகளே தடைக்கல்லாக உள்ளது. எதிர்வரும் 03 வருடங்களுள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மூலம் பெரும்பாலான பாதைகள் புனரமைக்கப்படுவதற்கான அனைத்து வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே போக்குவரத்து நேர ஒழுங்கமைப்பு சீர்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்ட சாரதிகள் நடத்துனர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறையின் போது பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நடத்துனர்களும், சாரதிகளும் பணயிகளுடன் அன்பாக பழக வேண்டியதுடன் ஒழுக்க விதிகளிலும், நேர ஒழுங்கமைப்புக்களிலும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். போக்குவரத்து ஒரு தொழில் என்பதற்கு அப்பால் இது ஒரு சேவை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து தொழிலாளர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம். விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு முடியாது நிலைமையும் , இடைத்தரகர்கள் கொள்வனவு செய்து இலாபம் உழைப்பதற்கும் அடிகோல் இடுவது இச் சேவையாகும்.
கலை, காலச்சாரங்களில் சமூகம் மாற்றடைய வேண்டுமானால் போக்குவரத்துச் சேவையாளர்கள் பங்கு துரிதமாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் திரு. உ. யுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் திரு. உதயகுமார், திட்டமிடல் பணிப்பாளர் நந்தசேன , நிமல் காமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: