அபிவிருத்தியின் முக்கியத்துவம் இனி எல்லைக்கிராமங்களுக்கே- கிழக்கு மாகாண முதலமைச்சர்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக விளங்குகின்ற வடமுனை கிராமத்திற்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அங்குள்ள பாடசாலை கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எல்லா வகையான துன்பங்களையும் தாண்டி வந்து நாம் ஓர் ஆரம்பப்புள்ளியில் இருக்கின்றோம். இனிமேல்த்தான் நாம் தொடர்ந்து எமது வாழ்க்ககையின் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எமது சமூகத்தினது அபிவிருத்திகள் பற்றி பேசுவதற்கான சூழல் தற்போதுதான் உருவாகி இருக்கின்றது. இதை எமது மக்;கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் உறுதியான ஓர் அரசியல் தலமைத்துவத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும். இன்று கிழக்கு மாகாணத்திலே அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்துறை சார்ந்த அபிவிருத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதனை யாரும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாண சபையின் தோற்றத்தின் பின் அதிக பணிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அதற்கு இவ் வடமுனை, ஊத்துச்சேனை கிராமங்கள் விதிவிலக்கல்ல எனவும் குறிப்பிட்டார்.
நெக்டெப்பின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வடமனை பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் இவ் வடமுனைக்கிராமம் ஓர் எல்லைக் கிராமமாக இருப்பதன் காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு இக்கிராமம் முன்னெடுக்க வேண்டி நேரிடும். அதாவது எல்லைப்பிரச்சனை, காணிப்பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போகும். எனவே இனி வருகின்ற காலங்களில் நாமே எமது சமூகத்தை பலமாக்குவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அரசியல்வாதி என்ற ரீதியிலும், மட்டக்களப்பான் என்ற ரீதியிலும் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் குறிப்பிட்டார். தோடர்ந்து பேசுகையில் எனது நிதி ஒதுக்கீட்டிலே அதிகமான நிதிகளையும், வேலைத்திட்டங்களையும் எல்லைக்கிராமங்களுக்கே முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன்.
இக்கிராமத்தை பொறுத்த வரையில் முக்கிய பிரச்சனை குடிநீhப்பிரச்சனை மற்றும் வீடு இன்மை,போக்குவரத்து, மின்சாரம், தபால்சேவை மற்றும் கல்வி இவை அனைத்தையும் நான் மிகவும் அதிக அக்கறை கொண்டு செய்த தருவதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். நான் ஏற்கனவே ஒதுக்கிய 75 இலட்சம் ரூபாய்க்கும் இவ்வேலைத்திட்டங்களை செய்ய முடியாது எனவே இனி வருகின்ற நிதி ஒதக்கீட்டில் இவற்றிற்கு அதி முக்கியத்துவம் கொடத்து நான் இதனால் செய்து தருவேன் எனவும் குறிப்பிட்ட அவர் இக் கிராமத்திற்கு இதுவரை வீட்டுத் திட்டம் எதுவும் வரவில்லை எனவே இவ் ஆண்டு வருகின்ற விட்டுத்திட்டத்தினை நான் வடமுனைக் கிராமத்திற்கு ஏற்படடுத்தித் தருவேன் எனவும் குறிப்பிட்டார். இப்பாடசாலையின் அதிபர் ஜீவநாதன். தலமையில் இடம் பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவிற்கு கிழக்குமாகணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,கல்குடாவலயக்கல்விப்பணிப்பாளர். சுபாசக்கரவத்தி,கல்விப்பிரிவின் பொறியியலாளர். கிருஸ்ணதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: